தான்சானியா: ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தான்சானியா.;

Update:2025-12-26 21:16 IST

டொடோமா,

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தான்சானியா. இந்நாட்டில் ஆப்பிரிக்காவின் மிகவும் உயரமான கிளிமஞ்சாரோ மலை உள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழும் இந்த மலை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், இந்த மலைக்கு சுற்றுலா சென்ற பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் அந்த சுற்றுலா பயணியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உடல்நலம் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணியை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் மருத்துவமனைகு புறப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் 2 சுற்றுலா பயணிகள், மருத்துவக்குழுவினர் உள்பட 5 பேர் பயணித்துள்ளனர். மலையின் ரரூப் கேம்ப் பகுதியில் இருந்து கிலப் சம்மிட் பகுதி நோக்கி சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் மலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்