பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் பலி
இந்த மாத துவக்கத்தில் ஈரான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள சோதனைச்சாவடி ஒன்றை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.;
கராச்சி,
பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கேச் மாவட்டத்தில் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பலியாகினார். இதையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த கூடுதல் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
முன்னதாக கடந்த நவம்பர் மாதம், இதே இடத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படையினர் 2 பேர் கொல்லப்பட்ட்டனர். அதேபோல், இந்த மாத துவக்கத்தில் ஈரான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள சோதனைச்சாவடி ஒன்றை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.