திமிங்கலம் மோதி கடலில் கவிழ்ந்த படகு - 5 பேர் பலி

திமிங்கலம் மீது மோதி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.;

Update:2022-09-11 05:48 IST

வில்லிங்டன்,

நியூசிலாந்து நாட்டின் கோஸ் பே பகுதியில் உள்ள கடலில் நேற்று பறவை ஆர்வலர்கள் 11 பேர் சிறிய ரக படகில் பயணித்தனர். 11 பேரும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆவர்.

அப்போது, அந்த சிறிய ரக படகு மீது கடலில் நீந்திக்கொண்டிருந்த திமிங்கலம் மோதியுள்ளது. இதில், படகு நிலைகுலைந்து கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 11 பேரும் கடலில் மூழ்கி தத்தளித்தனர். இது குறித்து தகவலறிந்த கடலோர காவல்படையினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் மூழ்கிய படகில் இருந்து 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், இந்த விபத்தில் கடலில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர். திமிங்கலம் மீது மோதி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் விபத்துக்கான திமிங்கலம் மோதியது தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.       

Tags:    

மேலும் செய்திகள்