சோமாலியாவில் தற்கொலைப் படை தாக்குதல்; வாகனத்தில் குண்டு வெடித்து 15 பேர் உயிரிழப்பு
தற்கொலைப் படை தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ரத்தவெள்ளத்தில் 15 பேர் உயிாிழந்தனர்.;
Image Courtesy : AFP
மொகதிசு,
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் பெலிட்வினி நகரில் வாகனம் ஒன்று வெடிமருந்துகளை நிரப்பி கொண்டு சென்றது. அங்குள்ள சோதனைச்சாவடி அருகே வந்தபோது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த தற்கொலைப் படை தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ரத்தவெள்ளத்தில் 15 பேர் உயிாிழந்தனர். இதில் 5 பேர் காவல்துறையினர் ஆவர். மேலும் இந்த சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.