கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே பயங்கர காட்டுத் தீ

காட்டுத்தீயால் இதுவரை சுமார் 35 சதுர கி.மீ. அளவிலான காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.;

Update:2023-07-21 22:39 IST

Image Courtesy : AFP

ஏதென்ஸ்,

கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகருக்கு மேற்கே சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த காட்டுத்தீயால் இதுவரை சுமார் 35 சதுர கி.மீ. அளவிலான காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பற்றி எரிந்து வரும் இந்த காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்