இலங்கை வர்த்தக மந்திரி உடன் இந்திய தூதர் சந்திப்பு

இலங்கை தொழில் துறை மந்திரி நலின் பெர்னாண்டோவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசினார்.;

Update:2022-06-29 21:34 IST

கொழும்பு,

இலங்கை தொழில் மந்திரி நலின் பெர்னாண்டோவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசினார்.

இதுகுறித்து இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "இந்திய தூதர் இன்று தொழில் துறை மந்திரி நலின் பெர்னாண்டோவை சந்தித்தார். இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே வர்த்தக அளவை அதிகரிப்பது, வணிக இணைப்புகளை எளிதாக்குவதற்கான தளங்களை உருவாக்குவது போன்ற இருதரப்பு வர்த்தகத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி இருவரும் விவாதித்தனர்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வாரம், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்