வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்து செல்லப்படுகிறார்
கலிதாஜியா நாளை ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் லண்டனுக்கு அழைத்து செல்லப்பட உள்ளார்.;
டாக்கா,
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா தச முன்னாள் ஜியா (வயது 80). இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து தலைநகர் டாக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே கலிதா ஜியாவை இங்கிலாந்தின் லண்டனுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர் நாளை ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் லண்டனுக்கு அழைத்து செல்லப்பட உள்ளார்.
இதுதொடர்பாக வங்காளதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்திற்கு நாளை காலை 8 மணிக்கு தரையிறங்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 9 மணிக்கு புறப்படும் நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது என்றார். இந்த விமானம், ஜெர்மனியை தளமாகக் கொண்ட எப்.ஏ.ஐ விமானக் குழுமத்திடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.