அமெரிக்க விமான நிலையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி இந்தியர் உயிரிழப்பு - நண்பரை வரவேற்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்
பாஸ்டன் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
கோப்புப்படம்
நியூயார்க்,
டெக்சாஸ் மாகாணம் பாஸ்டன் நகரில் வசித்து வந்த இந்தியர் விஸ்வசந்த் கொல்லா. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் அங்குள்ள மருந்து நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் சம்பவத்தன்று விஸ்வசந்த் கொல்லா தனது நண்பரை வரவேற்று அழைத்து வருவதற்காக பாஸ்டன் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார்.
அங்கு அவர் விமான நிலையத்தின் நுழைவாயிலில் காரை நிறுத்திவிட்டு அதன் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு விமான பயணிகளை ஏற்றிவந்த பஸ் எதிர்பாராத விதமாக விஸ்வசந்த் கொல்லா மீது மோதியது. இதில் அவர் சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.