பாகிஸ்தானில் 13 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம்: பக்ரீத்திற்கு கால்நடை வாங்க முடியாமல் கடும் அவதியில் மக்கள்..!

பாகிஸ்தானில் அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

Update: 2022-07-03 11:51 GMT

இஸ்லாமாபாத்,

அதிக பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு சரிவு, விரிவடையும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் பாகிஸ்தான் சிக்கித் தவித்து வருகிறது.

பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால், அந்நாட்டு பொதுமக்கள் அதிக அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வழக்கமாக கால்நடைகள் அதிக அளவில் விற்பனை ஆகும். ஆனால் பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின் காரணமாக கராச்சி சந்தையில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பண்டிகைக்கு கூட கால்நடைகள் வாங்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

மேலும் கடந்த மே மாதத்திற்கு பின்னர் எரிபொருட்களின் விலை 90 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளநிலையில், இதனால் ஏற்பட்ட போக்குவரத்து செலவும் கால்நடை விலை உயர்விற்கு காரணமாக உள்ளதாக கராச்சியில் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்