அதிகரிக்கும் போர் பதற்றம்.. ஈரான் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதில் தாக்குதல்

ஈரானை எந்நேரமும் இஸ்ரேல் தாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

Update: 2024-04-19 03:12 GMT

கோப்புப்படம் 

டெல் அவிவ்,

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது. எனினும், அமெரிக்கா உதவியுடன் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள தனது சொந்த முடிவை எடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து இருந்தார். ஈரானை எந்நேரமும் இஸ்ரேல் தாக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரான் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்கான சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரானின் மேற்கு பகுதியில் வான்வெளி மூடப்பட்டுள்ளது. பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டு உள்ளன.

ஈரான் மீதான இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் மோசமாக இருக்கும் பட்சத்தில் அது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமோ என்ற கேள்விகளை எழுப்பி உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்