ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு

ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.;

Update:2023-05-05 19:06 IST

Photo Credit: Reuters

டோக்கியோ,

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது. ஜப்பானின் சுசு நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. நில நடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

எனினும் கடல் மட்டத்தில் 10 செ.மீ அளவுக்கு மாற்றம் இருக்கும் என்று புவியியல் அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதனால், உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. ஒருவர் பலியான நிலையில், 22 பேர் காயம் அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்