பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.7ஆக பதிவு

நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.;

Update:2023-11-18 06:01 IST

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள மண்டனொ தீவை மையமாக கொண்டு 78 கிலோமீட்டர் ஆழத்தில் நேற்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்