2 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் போர்: உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 8 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-04-17 09:27 GMT

கீவ்,

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 2 ஆண்டுகளை கடந்து இன்று 783வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை, டிரோன் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் செர்னிகிவ் மாகாணம் மீது ரஷியா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ரஷியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு அருகே அமைந்துள்ள செர்னிகிவ் மீது இன்று காலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 18 பேர் படுகாயமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்