இந்தியா, சீனாவிடம் உதவி கோரினார் கோத்தபய ராஜபக்சே

இந்தியா, சீனாவிடம் கோத்தபய ராஜபக்சே உதவி கோரியுள்ளார்.;

Update:2022-06-10 00:39 IST

Image Courtacy: AFP

கொழும்பு,

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. இந்தநிலையில், இந்தியா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றின் தூதர்களை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று அழைத்து பேசினார்.

அப்போது, இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலவரத்தை எடுத்துரைத்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் அளிக்குமாறு அந்நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார். அந்த நாடுகள் ஏற்கனவே அளித்த உதவிக்காக பாராட்டு தெரிவித்தார். இச்சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக கோத்தபய ராஜபக்சே தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியுள்ளார். இதற்கிடையே, இலங்கைக்கு இந்தியா அளித்த உதவிகளுக்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்