இந்தியாவில் டுவிட்டர் புளூ டிக் சேவைக்கு மாதம் ரூ.719 கட்டணம் நிர்ணயம்

புளூ டிக் சேவையை யாரேனும் தவறாகப் பயன்படுத்தினால், அவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என்று எலோன் மஸ்க் கூறியுள்ளார்.

Update: 2022-11-11 03:05 GMT

கோப்புப்படம் 

வாஷிங்டன்,

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை சில நாட்களுக்கு முன்பு தன் வசப்படுத்தினார். எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், குறிப்பிட்ட பயனர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 வரை(19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து டுவிட்டர் 'புளூ டிக்கிற்கு' இனி மாதம் 7.99 டாலர் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவுசெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதனன்று அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் உள்ள பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ப்ளூ சேவை, வரும் நாட்களில் இந்தியாவில் பரவலாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சேவையானது இந்தியாவில் பெற மாதம் ரூ. 719 செலவாகும், இது துல்லியமாக இருந்தால், முதலில் ஐபோன் பயனர்களுக்கு வழங்கப்படும்.

டுவிட்டர் புளூ டிக் சேவையை தற்போது பணம் கொடுத்து பெறும் வசதி உள்ளதால், இதனை சிலர் தவறாக பயன்படுத்தக்கூடும் என்று பலர் கண்டித்துள்ளனர். எனினும், யாராவது ட்விட்டர் இதனை தவறாகப் பயன்படுத்தினால், அவர்கள் தங்களின் பணத்தை இழக்க நேரிடும் என்றும் அவர்களின் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் எலோன் மஸ்க் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்