"போரை முடிவுக்கு கொண்டு வர உண்மையான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்" - போப் பிரான்சிஸ்

உக்ரைனுக்கு செல்ல விரும்புவதாகவும், சரியான நேரத்திற்காக காத்திருப்பதாகவும் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். 3

Update: 2022-06-05 16:31 GMT

லண்டன்,

உகரைன்-ரஷியா இடையிலான போர் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரால் இரு தரப்பிலும், அதிக அளவில் உயர்சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த போரை நிறுத்துவதற்கு சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன. குறிப்பாக வாடிகன் தேவாலயத்தின் போப் பிரான்சிஸ், போரை முடிவுக்கு கொண்டு வர, உலக நாடுகளின் தலைவர்கள் தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.

மேலும் உக்ரைனுக்கு செல்ல விரும்புவதாகவும், சரியான நேரத்திற்காக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் இன்று உரையாற்றிய அவர், "மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய அழிவு மற்றும் மரணத்தின் சீற்றங்கள் தற்போது அதிகரித்து வரும் இந்த வேளையில், உலக நாடுகளின் தலைவர்களிடம் மீண்டும் நான் கோரிக்கை வைக்கிறேன், தயவுசெய்து மனிதகுலத்தை அழிவுக்கு இட்டுச் செல்லாதீர்கள்" என்று தெரிவித்தார்.

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் தொடங்கி 100 நாட்களை கடந்துவிட்ட நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உண்மையான பேச்சுவார்த்தையில் நடத்தப்பட வேண்டும் எனவும், போருக்கான தீர்வை எட்டுவதற்கு தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்