வெற்றியைத் தேடித்தரும் தேவனின் ஆசீர்வாதம்

நீங்கள் விரும்புவதற்கும், கேட்பதற்கும் மிகவும் அதிகமாய் உங்களை ஆசீர்வதித்து உங்களை சந்தோஷப்படுத்துவதுதான் நம்முடைய ஆண்டவருடைய சித்தமாகும்.

Update: 2018-01-09 09:58 GMT
‘நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக் கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்’. எபே.3:20

இந்த வசனத்தின்படி, நீங்கள் விரும்புவதற்கும், கேட்பதற்கும் மிகவும் அதிகமாய் உங்களை ஆசீர்வதித்து உங்களை சந்தோஷப்படுத்துவதுதான் நம்முடைய ஆண்டவருடைய சித்தமாகும்.

வீட்டாரை ரட்சிக்கும் தேவன்

‘அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருடைய ஒரு ஸ்திரீ கேட்டு க்கொண்டிருந்தாள், பவுல் சொல்லியவைகளை கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தை திறந் தருளினார். அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நா னம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என எங்களை வருந்திக் கேட்டுக்கொண் டாள்’. அப்போஸ்தலர் 16:14,15

மேற்கண்ட வசனத்தில் அப்போஸ்தலர் பவுல் தேவனுடைய வார்த்தைகளை உபதேசிக்கும் போது லீதியாள் என்னும் பெயருள்ள பெண் இந்த வசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அப்போஸ்தலர் 16:15 சொல்லுகிறது, ‘அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ் நானம் பெற்றார்கள்’.

இதிலிருந்து நாம் அறிந்துக் கொள் கிறது என்ன? ஒரு குடும்பத்தில் ஆண்டவர் ஒரு நபரை சந்திக்கும்போ து அந்த நபர் மூலமாக முழு குடும் பத்தையும் ரட்சிக்க தேவன் வல்லவராக இருக்கிறார்.

மேலும், பவுலும் சீலாவும் நடுராத்தி ரியில் ஜெபம் பண்ணி தேவனை துதித்து பாடினபோது சிறைச்சாலையின் அஸ்தி வாரங்கள் அசைந்தது. உடனே கதவுகள் திறந் தன. எல்லாருடைய கட்டுகளும் கழன்றது. அதை அறிந்த சிறைச்சா லைக்காரன் வாளை உருவி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தபோது பவுலுடைய வார்த்தையை கேட்டு ரட்சிப்புக்குக் தன்னை அர்ப்பணித்தான்.

‘இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றான்’ அப்போஸ்தலர் 16:30. அதற்கு பவுல் ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் ரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த அனை வருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்’. அப்போஸ்தலர் 6:31,32

மேலும், அவ்வதிகாரத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது ‘வீட்டார் அனைவரோடும் கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்’. (அப்.16:34) என காண்கிறோம்.

நம்முடைய ஆண்டவர் ஒரு வீட்டில் ஒருவரை ரட்சிப்பாரென்றால் அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டு முழுக்குடும்பத்தையும் ரட்சித்து எபேசியர் 3:20-ன் படி தம்முடைய வல்லமையை வெளிப்படுத்துவார்.

நிரம்பி வழியும் ஆசீர்வாதத்தை அருளும் தேவன்

‘அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள், அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெய்யை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக் கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள் என்றான்’. II ராஜாக்கள் 4:7

நம்முடைய கர்த்தர் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை மட்டும் கொடுக்கிறவரல்ல, உலகப்பிரகாரமான ஐசு வரியத்தையும், செழிப்பையும் அருளுகிற தேவன் என்பதை மறந்து போகக்கூடாது.

உதாரணமாக மேலே குறிப்பிட்ட அதிகாரத்தில் ஆவியானவர் ஒரு சம்பவத்தை உங்களுக்கு நினை வூட்ட விரும்புகிறார். ஒரு தீர்க்கதரிசி மரிக்கும்போ து கடன்காரனாக மரித்தான். விதவையான அவருடைய மனைவி தன்னுடைய 2 பிள்ளைகளோடு தன்னுடைய பிரச்சினையிலிருந்து விடுதலையடைவதற்காக எலிசா தீர்க்கதரிசியை அணுகினாள்.

‘வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல்?’ என்று தீர்க்கதரிசி கேட்டபோது ‘ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் என் வீட்டில் ஒன்றும் இல்லை’ என்றாள் என II ராஜாக்கள் 4:2 கூறுகிறது.

ஆனால் நடந்தது என்னவெனில் வேறே பாத்திரம் இல்லை என்று சொல்லக் கூடிய அளவிற்கு எல்லா பாத்திரங்களையும் கர்த்தர் எண்ணெய்யால் நிரப்பி னார். மேலும், அந்த எண்ணெய்யை விற்று தன்னுடைய கடனை எல்லாம் அடைத்து, மீதமுள்ள எண்ணெய்யை வைத்து தானும் தன்னுடைய பிள்ளை களும் ஜீவனம் பண்ணக் கூடிய அளவிற் கு நிரம்பி வழியும் ஆசீர்வாதத் தைக் கர்த்தர் கட்டளையிட்டார்.

அந்த விதவையோ கடனை அடைப் பதற்கு வழியைத் தேடி தேவ மனுஷனை அணுகினாள். கர்த்தரோ அவளுடைய கடனை மட்டுமல்ல, அவளும், அவ ளுடைய பிள்ளைகளும் வாழ்க்கை நடத்துவதற்கான வழியையும் திறந்து கொடுத்தார். அந்த விதவைக்கு அற்புதம் செய்த கர்த்தர் உங்களுக்கு ம் அற்புதத்தை செய்து நிரம்பி வழியும் ஆசீர்வாதத்தினால் நிச்சயம் நிரப்பு வார்.

ஏனெனில் எபேசியர் 3:20-ன்படி நீங்கள் நினைப்பதற்கும் வேண்டி க்கொள்வதற்கும் மிகவும் அதிகமாய் உங்களில் கிரியை செய்கிறவர். 

மேலும் செய்திகள்