ராகு-கேது உருவான வரலாறு

தேவர்கள் அமுதம் பெற பாற்கடலை கடைந்தனர். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடல் கடையப் பெற்றது. பாம்பின் தலைப்பகுதியை அசுரர்களும், வால் பாகத்தை தேவர்களும் பற்றி இருந்தனர்.

Update: 2020-08-31 22:30 GMT
அப்போது ஆலகால விஷம் தோன்றியது. சிவபெருமான் அந்த விஷத்தை உண்டார். விஷம் அவரது கண்டத்துக்கு (கழுத்துக்கு) கீழே போகவிடாமல் பார்வதி தடுத்தாள். பின்னர் அமுதத்தை வழங்க விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார். தேவர்களையும், அசுரர்களையும் தனித்தனியாக அமரும்படி மோகினி கூறினாள்.

அப்போது ஸ்வர்பானு என்ற அரக்கன், தேவர்கள் வரிசையில் அமர்ந்து அமுதத்தை உண்டான். அவனது சூழ்ச்சி பின்னர் தெரிய வந்தது. கோபம் கொண்ட மோகினி வடிவத்தில் இருந்த விஷ்ணு, ஸ்வர்பானுவை கட்டுவத்தால் அடித்தார். அப்போது அவன் உடல் தலை வேறு, உடல் வேறானது.

உடல் துண்டிக்கப்பட்ட ஸ்வர்பானு திருமாலை நோக்கி கடும் தவம் புரிந்தான். இதனால் மகிழ்ந்த விஷ்ணு அவன் தவத்தை ஏற்று, பாம்பின் உடல், பாம்பின் தலை கொண்ட இரண்டு உருவங்களாக ஸ்வர்பானுவை சிருஷ்டித்தார்.

பாம்பின் உடலும், மனிதனின் தலையும் கொண்டது ராகுவானது. பாம்பின் தலையும் மனித உடலும் கேதுவானது.

இப்படிப்பட்ட ராகுவும், கேதுவும் ‘சாயா கிரகங்கள்’ என்றும், ‘நிழற்கிரகங்கள்’ என்றும் வர்ணிக்கப்படுகின்றன. நம்மை நிழல்போல் தொடரும் துன்பங்கள் விலகிச்செல்ல சர்ப்ப ப்ரீதிகள் செய்வது நல்லது.

மேலும் செய்திகள்