ராமாயண கால ஆலயங்கள்

ஜெயினர்களின் புனிதத் தலமாக கருதப்படும் ‘கொபான’ தான் கொப்பல் மாவட்டமாக அழைக்கப்படுகிறது.

Update: 2021-06-08 12:49 GMT
பெங்களூருவில் இருந்து 357 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த மாவட்டம். இங்கு துங்கபத்ரா ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்தது ‘ஆனேகுந்தி.’ இது அசோகரின் தலைநகராக இருந்திருக்கிறது. இது ராமாயண காலத்தில் வாழ்ந்த வாலியின் தலைநகரமான ‘கிஷ்கிந்தா’ என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு துங்கபத்ரா ஆற்றின் நடுவே இருக்கும் நவபிருந்தாவனத்தை படகில் சென்று ரசிக்கலாம். மேலும் விஜயநகர பேரரசின் சிறந்த மன்னராக விளங்கிய கிருஷ்ணதேவராயரின் சமாதி, 64 தூண்கள் கொண்டு இந்த ஆற்றின் நடுவில் நிறுவப்பட்டு உள்ளது. அத்துடன் 
இங்குள்ள இட்டகி மஹாதேவா கோவில், ஹூலிகம்மா கோவில், குக்கனூர் நவலிங்க கோவில் உள்ளிட்ட கோவில்கள் புராதன கட்டிடக்கலைகளை விளக்கும் நினைவுச் சின்னங்களாக உள்ளன.

மேலும் செய்திகள்