பசுவிற்கு அருள்புரிந்த பசுபதீஸ்வரர்

கரூரில் அமைந்துள்ளது, பசுபதீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்.

Update: 2022-05-03 00:56 GMT
இக்கோவிலில் கருங்கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. இதன் ஒரு பக்கத்தில் புகழ்சோழ நாயனார் சிற்பமும், மறு புறம் சிவலிங்கத்தை நாவால் வருடும் பசுவும், அதன் பின் கால்களுக்கிடையில் ஒரு சிவலிங்கம் உள்ள சிற்பமும் காணப்படுகிறது.

மூலவர்: பசுபதீஸ்வரர் (பசுபதிநாதர், பசுபதி, ஆனிலையப்பர்)

அம்மன்: அலங்காரவல்லி, சவுந்தரநாயகி, கிருபாநாயகி

தல விருட்சம்: வஞ்சி மரம்

தீர்த்தம்: தாடகை தீர்த்தம், ஆம்பிரவதி நதி (அமராவதி)

பதிகம் பாடியவர்கள்:- திருஞானசம்பந்தர்- தேவாரம், கருவூரார்- திருவிசைப்பா, அருணகிரிநாதர் - திருப்புகழ்.

தமிழ்நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் திருக்கோவில்களில், இது 211-வது ஆலயம் ஆகும்.

இத்தல சிவலிங்கத்தின் மீது, மாசி மாதத்தில் தொடர்ச்சியாக 5 நாட்கள், சூரியனின் கதிர் ஒளி படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களின் கோரிக்கை நிறைவேறும் பக்தர்கள், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது வாடிக்கை. இன்னும் சிலர் ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

இத்தல இறைவன் பசுபதீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். சதுரமான ஆவுடையாரின் மீது, சற்றே சாய்வாக இருக்கிறார்.

மேலும் செய்திகள்