அங்காள பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கு

கொல்லுமாங்குடி அங்காள பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கு நடந்தது;

Update:2022-08-21 23:49 IST

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே உள்ள கொல்லுமாங்குடியில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று விக்னேஸ்வர பூஜைகள் நடந்தன. அதனைத்தொடர்ந்து தினமும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று 6-வது கால யாகசாலை பூஜை நிறைவு பெற்ற பின்னர் பூஜைகள் செய்யப்பட்ட கடங்கள் புறப்பட்டு நேற்று காலை விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.





Tags:    

மேலும் செய்திகள்