காத்தாயி அம்மன் கோவில் திருவிழா

திருவெண்காடு அருகே காத்தாயி அம்மன் கோவில் திருவிழா தொடங்கியது;

Update:2022-07-31 21:43 IST


மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ள திருக்குறவளூரில் காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆண்டு திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனையொட்டி அம்மனுக்கு பல்வேறு மங்களப் பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனைகள் நடந்தன. இரவு அம்மன் வீதி உலா நடந்தது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வீதி உலாவும் நடக்கிறது.





Tags:    

மேலும் செய்திகள்