குடவாசல் மூர்த்தி விநாயகர் கோவிலில் பாலாலயம்
குடவாசல் மூர்த்தி விநாயகர் கோவிலில் பாலாலயம்;
குடவாசல்:
குடவாசல் கும்பகோணம் சாலையில் உள்ள மூர்த்தி விநாயகர் கோவிலில் பாலாலய நிகழ்ச்சி மற்றும் திருப்பணி தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் சிவாச்சாரியார்கள் விக்னேஸ்வர பூஜை, மகாலட்சுமி பூஜை செய்து பாலாலயம் நடந்தது. குடவாசல் கோணேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பிரபாகரன், ஆய்வர் ஆரோக்கியமதன் ஆகியோர் முன்னிலையில் திருப்பணி தொடக்க விழா நடந்தது. இதில் கோவில் கணக்காளர் முருகன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.