ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2023-08-14 00:28 GMT

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கோபி

கோபி அருகே பாரியூரில் பிரசித்தி பெற்ற அமரபணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தையொட்டி சாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.

இதேபோல் கோபி விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், தேன், தயிர், எலுமிச்சை பழச்சாறு, விபூதி, சந்தனம், குங்குமம், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் காட்சி அளித்தார். பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது.

மேலும் காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், மொடச்சூர் சோமேஸ்வரர் கோவில், பவளமலை கைலாசநாதர் கோவில், பச்சைமலை மரகத ஈஸ்வரர் கோவில், கோபி நஞ்சுண்டேஸ்வரர் கோவில், கூகலூர் மீனாட்சி அம்பிகை சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்பட கோபி பகுதியில் உள்ள பல்வேறு ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவிலில் சாமி மற்றும் அம்மனுக்கு பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நந்தி வாகனத்தில் நாகேஸ்வரரும், அம்மனும் அருள்பாலித்தனர்.

இதேபோல் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில், கொந்தளம் நாகேஸ்வர சாமி கோவில், பழனிக்கவுண்டம்பாளையம் பழனியாண்டவர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

சென்னிமலை

சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோடு ஆதித்யா நகரில் உள்ள நர்மதை மருந்தீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ பூஜை நடைபெற்றது.

இதையொட்டி சாமிக்கு 10 கிலோ விபூதி அலங்காரத்துடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்