இந்த வார விசேஷங்கள்: 7-5-2024 முதல் 13-5-2024 வரை

நாளை மறுநாள் சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

Update: 2024-05-07 05:36 GMT

7-ந் தேதி (செவ்வாய்)

* அமாவாசை.

* நாங்குநேரி உலகநாயகி அம்மன் புஷ்பாஞ்சலி.

* குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி.

* திருவரங்கம் நம்பெருமாள் சப்தாவர்ணம் சாற்றுவிழா.

* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

* சமநோக்கு நாள்.

8-ந் தேதி (புதன்)

* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சீராளக்கரி நைவேத்தியம்.

* திருவரங்கம் நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பாடு.

* காரைக்குடி கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்சவம்.

* கீழ்நோக்கு நாள்

9-ந் தேதி (வியாழன்

* வீரபாண்டி கவுமாரியம் மன் மின்விளக்கு அலங்கார புஷ்ப பல்லக்கில் பவனி.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

* கீழ்நோக்கு நாள்

10-ந் தேதி வெள்ளி)

* திரவுபதி அம்மன் தீக்குளி உற்சவம்

* மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

11-ந் தேதி (சனி)

* காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு.

* சிவகாசி விசுவநாதர் பூத வாகனத்தில் உலா.

* வீரபாண்டி கவுமாரியம்மன் தெற்கு ரத வீதியில் ரத உற்சவம்.

* தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு.

* சமநோக்கு நாள்.

12-ந் தேதி (ஞாயிறு)

* திருநெல்வேலி புட்டபுரத்தி அம்மன் உற்சவம்.

* சிவகாசி விஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

* வீரபாண்டி கவுமாரியம்மன் காலை தெற்கு ரத வீதியிலும், இரவு மேற்கு ரத வீதியிலும் பவனி.

* மேல்நோக்கு நாள்.

13-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* திருச்செந்தூர் சுப்பிரமணியர் வைகாசி விசாக உற்சவம்.

* காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.

* சிவகாசி விஸ்வநாதர் புஷ்ப சப்பரம்.

Tags:    

மேலும் செய்திகள்