சித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோவில் தேரோட்டம்
மெலட்டூர் சித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோவில் தேரோட்டம் நடந்தது.;
மெலட்டூர்;
மெலட்டூரில் பிரசித்தி பெற்ற சித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாள் பிரமோற்சவ விழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தது. தேரை பெண்களே வடம் பிடித்து இழுத்து சென்றனர். தொடர்ந்து சித்தி, புத்தி விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.