காா்த்திகை சோமவார பிரதோஷ வழிபாடு

திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் காா்த்திகை சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது;

Update:2022-11-22 00:45 IST

திருமக்கோட்டை;

திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் நந்திக்கும், ஞானபுரீஸ்வரருக்கும் பால், பன்னீர், சந்தனம், இளநீர், திரவியப்படி அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நந்திக்கும், சிவபெருமானுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்