காமாட்சியம்மன் கோவில் திருவிழா
பசுபதிகோவில் காமாட்சியம்மன் கோவில் திருவிழா நடந்தது.;
அய்யம்பேட்டை;
அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் (தெற்கு) கிராமத்தில் எழுந்தருளியுள்ள காமாட்சியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது. நேற்று குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து வாண வெடிகள், மேள தாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி, முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.