இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

மதுரை மீனாட்சி - சொக்கநாதர் பெருவிழா தொடக்கம்.

Update: 2024-04-12 00:56 GMT

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 30-ந்தேதி வெள்ளிக்கிழமை.

திதி: சதுர்த்தி திதி மாலை (5.42)க்கு மேல் பஞ்சமி திதி.

நட்சத்திரம்: ரோகிணி நட்சத்திரம் இரவு (5.07)க்கு மேல் மிருகசீர்ஷம் நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம். மேல்நோக்குநாள்

சூலம்: வடக்கு

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

எமகண்டம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

நல்லநேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்:

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். மதுரை மீனாட்சி - சொக்கநாதர் பெருவிழா தொடக்கம். மன்னார்குடி ராஜகோபாலசுவாமி தேர். குற்றாலம் குற்றாலநாதர் பவனி.

ராசிபலன்:

மேஷம்

குழப்பங்கள் அகலும் நாள். கூடுதல் வருமானம் உண்டு. உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பற்றிய நல்ல தகவல் வரலாம்.

ரிஷபம்

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப்பேசி காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும். கட்டிடம் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்

வாங்கிய கடனைக் கொடுத்து மகிழும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். பொதுவாழ்வில் புகழ்கூடும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.

கடகம்

இல்லம் தேடி இனிய செய் திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் வழியில் வருமானங்கள் உண்டு. இடம், பூமி வாங்கும் யோகம் ஏற்படும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும்.

சிம்மம்

ஆதாயம் தரும் தகவல் அலைபேசி வழியில் வரும் நாள். வசதியான வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் நேற்று உருவான பிரச்சினை இன்று தீரும்.

கன்னி

சேமிப்பு உயரும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதையும் உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

துலாம்

மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சியில் தளர்ச்சி உண்டு. வாகனம் பழுதுகளால் வாட்டம் காண்பீர்கள். வாங்கிய இடத்தை விற்கும் சூழ்நிலை உருவாகலாம்.

விருச்சிகம்

பணவரவு திருப்தி தரும் நாள். தொட்ட காரியங்களில் வெற் றிகிட்டும். வாகனம் வாங்குவதில் வெற்றி ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

தனுசு

செல்வாக்கு அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளால் நன்மை உண்டு. திடீர் பயணம் திகைக்க வைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும், மாலைநேரம் மனமினிக்கும் செய்திகள் வந்து சேரலாம்.

மகரம்

தீட்டிய திட்டம் வெற்றி பெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

கும்பம்

நட்பு வட்டம் விரிவடையும்நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். எடுத்தோம், முடித்தோம் என்று எந்தச் செயலையும் செய்து முடிப்பீர்கள்.

மீனம்

இடமாற்றத்தால் இனிமை ஏற்படும் நாள். தொழில் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர் பகையால் உள்ளம் கவலை கொள்ளும். எதிர்பாராத செலவு உண்டு.

Tags:    

மேலும் செய்திகள்