சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சங்கரன்கோவில் நகரில் உள்ள புதுமனைத் தெரு, லட்சுமியாபுரம் தெரு, கோமதியாபுரம் தெரு உள்ளிட்ட தெருக்களில் 33 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.