பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கூடுதல் வீடுகள்

நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் 2022-க்குள் சொந்த வீடு கிடைப்பதை உறுதி செய்யும் அடிப்படையில் பிரதமரின் வீட்டு வசதி திட்டம் (நகரம்) (Pradhan Mantri Awas Yojana (Housing for All Urban) மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

Update: 2019-12-07 10:25 GMT
சமீபத்தில், ரூ.4,988 கோடி செலவில் 1.23 லட்சம் வீடுகள் கட்டுவதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் (Ministry of Housing and Urban Affairs Mo HUA) செயலாளர் தலைமையிலான, மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழு (Central Sanctioning And Monitoring Committee CSMC) ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் 26,709 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். மேலும், மேற்கு வங்கம், குஜராத், பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் வீடுகள் அமைக்கப்பட உள்ளன.

இதுவரை நகரங்களில் மட்டும் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கிராமங்களையும் சேர்த்து மொத்தமாக இந்த திட்டத்தின் கீழ் 2022-க்குள் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு என்ற நிலையில், நகர்ப்புறங்களில் மட்டும் 1.12 கோடி வீடுகள் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

மேலும் செய்திகள்