கிரிக்கெட்
பந்து வீச கூடுதல் நேரம்: ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மும்பை,

மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியினர் பந்து வீசுகையில் வழக்கத்தை விட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டனர். பந்து வீச்சின் போது காலதாமதமாக செயல்பட்டது குறித்து போட்டி நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போட்டி அமைப்பு குழு, ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளது.