கிரிக்கெட்
கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுகிறார், விஜய்

தமிழக வீரர் முரளிவிஜய் கவுண்டி கிரிக்கெட்டில் ஆட உள்ளார்.
லண்டன்,

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளில் ஆடிய இந்திய தொடக்க வீரர் முரளிவிஜய், பார்மில் இல்லாததால் எஞ்சிய போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் விஜய், இங்கிலாந்தில் உள்ள எஸ்செக்ஸ் கவுண்டி அணியில் விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 34 வயதான விஜய் கூறுகையில், ‘எஸ்செக்ஸ் அணிக்காக பங்கேற்க ஆர்வமுடன் உள்ளேன். சில ஆட்டங்களில் வெற்றிக்கு உதவிட முடியும் என்று நம்புகிறேன்’ என்றார். இந்த சீசனில் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் எஸ்செக்ஸ் அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.