கில், சாய் சுதர்சன் அபார சதம்..சென்னை அணிக்கு 232 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத்

குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது

Update: 2024-05-10 15:50 GMT

அகமதாபாத்,

ரசிகர்களை மகிழ்வித்து வரும் 17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 59-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில்  டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி , குஜராத் அணி முதலில் பேட்டிங்  செய்தது.

தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் , சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அரைசதம் கடந்த பிறகு சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

தொடர்ந்து சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்த கில் 50 பந்துகளில் சதமடித்தார். மறுபுறம் சாய் சுதர்சனும் 50 பந்துகளில் சதமடித்து அசத்தினார். தொடக்க விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்த நிலையில் சாய் சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் 55 பந்துகளில் 104 ரன்களுக்கு கில் ஆட்டமிழந்தார் .

இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பில் துஷார் தேஸ்பாண்டே 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 232 ரன்கள் இலக்குடன் சென்னை அணி விளையாடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்