இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க வேண்டும் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் சொல்கிறார்

சேத்தன் சவுகான் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1–4 என்ற கணக்கில் இழந்ததற்கு தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியே பொறுப்பு.

Update: 2018-09-16 21:30 GMT

தன்பாத், 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரும், உத்தரபிரதேச மாநில விளையாட்டுத்துறை மந்திரியுமான சேத்தன் சவுகான் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1–4 என்ற கணக்கில் இழந்ததற்கு தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியே பொறுப்பு. ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். ரவிசாஸ்திரி சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளர் ஆவார். அந்த பணியை செய்வதற்கு அவரை விட வேண்டும். கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணியே, வெளிநாட்டில் மிகச்சிறப்பாக ஆடக்கூடிய அணி என்று சாஸ்திரி சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். 1980–களில் விளையாடிய இந்திய அணியே, வெளிநாடுகளில் சிறந்த அணியாக விளங்கியது’ என்றார்.

மேலும் செய்திகள்