அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-02 11:19 GMT

image courtesy: ICC

கராச்சி,

டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாட உள்ளது.

அதன்படி பாகிஸ்தான் முதலில் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அங்கு இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளும் வரும் 10, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

இதனையடுத்து பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டி வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. மற்ற 3 போட்டிகளும் 25, 28, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம் தலைமையிலான அந்த அணியில் ஹரிஸ் ரவூப் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு:-

பாபர் அசாம் (கேப்டன்), அப்ரார் அகமது, அசம் கான், பகார் ஜமான், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது ஆமீர், முகமது ரிஸ்வான், முகமது இர்பான் கான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆஹா , ஷதாப் கான், ஷஹீன் ஷா அப்ரிடி, உஸ்மான் கான்.

Tags:    

மேலும் செய்திகள்