பெங்களூரு வீரர் ஸ்டெயின் விலகல்

தோள்பட்டையில் வீக்கம் ஏற்பட்டு இருப்பதால், இதனால் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அவர் விலகி தாயகம் திரும்ப இருப்பதாக பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது

Update: 2019-04-26 00:31 GMT
பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர்-நிலே (ஆஸ்திரேலியா) காயம் காரணமாக இந்த ஐ.பி.எல். சீசனில் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாமல் தாயகம் திரும்பினார். அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான ஸ்டெயின் சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணிக்காக 2 ஆட்டங்களில் ஆடி (4 விக்கெட் எடுத்தார்) வெற்றிக்கு பக்கபலமாக இருந்த ஸ்டெயின் தோள்பட்டை காயத்தில் சிக்கியிருக்கிறார். தோள்பட்டையில் வீக்கம் ஏற்பட்டு இருப்பதால் வலியால் அவதிப்படுகிறார். இதனால் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அவர் விலகி தாயகம் திரும்ப இருப்பதாக பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது விலகல் பெங்களூரு அணிக்கு பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை.

உலக கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இடம் பெற்றிருப்பதால் உலக கோப்பை போட்டியில் ஆடுவாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதையொட்டி சிறப்பு நிபுணரிடம் அவர் சிகிச்சை பெற இருக்கிறார்.

மேலும் செய்திகள்