வங்காளதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது

வங்காளதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

Update: 2019-07-16 23:38 GMT

* வங்காளதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி கொழும்பில் நடக்கிறது. இந்த தொடருக்கான வங்காளதேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பை தொடரில் 2 சதம் உள்பட 606 ரன்னும், 11 விக்கெட்டும் வீழ்த்திய ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் ஹஜ் புனித பயணம் செல்வதால் அணியில் இடம் பெறவில்லை. திருமணம் நடைபெற இருப்பதால் லிட்டான் தாஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மோர்தசா கேப்டனாக தொடருகிறார்.

* உலக கோப்பை கிரிக்கெட்டில் மொத்தம் 20 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், தனது நெருங்கிய உறவினர் இறந்த சோகத்தையும் தாங்கிக்கொண்டு சாதித்து இருப்பதாக அவரது தந்தை பிராங் ஆர்ச்சர் கூறியுள்ளார். இந்த உலக கோப்பையில் ரன்னின்றி (371 டாட் பால்) அதிக பந்துகளை வீசியவர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆவார்.

மேலும் செய்திகள்