ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: குஜராத் அணி 602 ரன்கள் குவிப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், குஜராத் அணி 602 ரன்கள் குவித்துள்ளது.

Update: 2020-02-21 22:54 GMT
வல்சாத்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத்- கோவா அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் வல்சாத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 2-வது நாளான நேற்று 8 விக்கெட்டுக்கு 602 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் பார்த்தீவ் பட்டேல் 124 ரன்களும், ரூஷ் கலாரியா 118 ரன்களும் விளாசினர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய கோவா அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

கட்டாக்கில் நடக்கும் ஒடிசாவுக்கு எதிரான கால்இறுதியில் பெங்கால் அணி 332 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய ஒடிசா அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. ஆந்திராவுக்கு எதிரான கால்இறுதியில் சவுராஷ்டிரா அணி 419 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சிராக் ஜனி 121 ரன்கள் சேர்த்தார்.

மேலும் செய்திகள்