வீட்டு வேலை செய்த பணிப்பெண் உயிரிழப்பு: இறுதிச்சடங்கு செய்த கவுதம் காம்பீர்

கவுதம் காம்பீர் தனது வீட்டில் ஏழு ஆண்டுகளாக வேலை செய்து வந்த பெண்ணின் இறுதிச் சடங்கை அவர்களது முறைப்படி செய்துள்ளார்.

Update: 2020-04-26 05:58 GMT
புதுடெல்லி,

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தற்போது கிழக்கு டெல்லியைச் சேர்ந்த எம்.பி.யுமான கவுதம் காம்பீர் வீட்டில் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரை சேர்ந்த சரஸ்வதி பத்ரா என்ற பெண் கடந்த 7 ஆண்டுகளாக  வேலை செய்து வந்துள்ளார். சமீபகாலமாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 21ஆம் தேதி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தற்போது ஊரடங்கு காரணமாக சரஸ்வதி உடலை ஒடிசாவுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஒடிசாவில் உள்ள அவரது குடும்பத்தினரும் டெல்லிக்குவர முடியவில்லை. இதனால் காம்பீரே அந்த பணிப்பெண்ணுக்கு அவரது குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்துள்ளார்.  அவரது இந்த மனிதாபிமான செயலை சமூக வலைதளங்களில் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அவரது குடும்பம். அவருடைய கடைசி சடங்குகளை செய்வது என் கடமை. சாதி, மதம், மதம், சமூக அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் எப்போதும் கண்ணியத்தில் நம்பிக்கை கொண்டவர். சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி. இது இந்தியா பற்றிய எனது யோசனை! ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்