20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டை எங்கு நடத்துவது? - ஐ.சி.சி. இன்று ஆலோசனை

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டை எங்கு நடத்துவது என்பது குறித்து ஐ.சி.சி. இன்று ஆலோசனை நடத்துகிறது.

Update: 2020-08-06 19:22 GMT
துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று நடக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தலால் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பரில் நடக்க இருந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. 

தள்ளிவைக்கப்பட்ட இந்த உலக கோப்பை போட்டியை அடுத்த ஆண்டில் (2021) தங்களுக்கு நடத்த வாய்ப்பு தர வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி வருகிறது. அதே சமயம் 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே பெற்று இருக்கிறது. ஒரு வேளை 2021-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் அரங்கேறினால், இந்தியாவுக்குரிய உலக கோப்பை போட்டி 2022-ம் ஆண்டுக்கு மாற்றப்படும். 

இந்த விவகாரம் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆஸ்திரேலிய நிர்வாகிகளுடன், இந்திய நிர்வாகிகள் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வர உள்ளனர். மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்தில் 50 ஓவர் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது

மேலும் செய்திகள்