தலைமை செயல் அதிகாரி மனு சாவ்னே மீது ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை

தலைமை செயல் அதிகாரி மனு சாவ்னே மீது ஐ.சி.சி. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2021-03-10 23:40 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயல் அதிகாரியாக 2019-ம் ஆண்டில் டெல்லியைச் சேர்ந்த 56 வயதான மனு சாவ்னே நியமிக்கப்பட்டார். 

கொரோனா காலக்கட்டத்தில் மனு சாவ்னேவின் நடவடிக்கைகள் ஐ.சி.சி.யின் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஊழியர்களிடம் அவர் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தன. துபாயில் உள்ள ஐ.சி.சி. தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களில் 90 சதவீதம் பேர் அவருக்கு எதிராக விசாரணை கமிட்டியிடம் புகார் தெரிவித்துள்ளனர். 

மற்ற விவகாரங்களிலும் அவரது அணுகுமுறை திருப்திகரமாக இல்லாததையடுத்து அவரை ஐ.சி.சி. தலைமை கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்துள்ளது. அவர் மீண்டும் இந்த பணியை தொடர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. 

இன்னும் ஓராண்டு காலம் அவரது ஒப்பந்தம் இருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே அவரை சுமுகமாக ராஜினாமா செய்ய வைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதற்கிடையே ஐ.சி.சி.யின் தற்காலிக தலைமை செயல் அதிகாரியாக ஜெப் அலார்டிஸ் பொறுப்பு ஏற்க உள்ளார்.

மேலும் செய்திகள்