மைதானத்தில் மோதல்: இலங்கை வீரர் குமராவுக்கு அபராதம்

விசாரணை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குமராவுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதமும், லிட்டான் தாசுக்கு 15 சதவீதமும் அபராதமாக விதித்துள்ளது.

Update: 2021-10-25 22:50 GMT

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி, வங்காளதேசத்தை தோற்கடித்தது. இதில் வங்காளதேச வீரர் லிட்டான் தாஸ் (16 ரன்) தனது பந்து வீச்சில் ஆட்டம் இழந்ததும் லஹிரு குமரா (இலங்கை) அவரை நோக்கி ஏதோ திட்டினார். அதற்கு லிட்டான் தாசும் பதிலுக்கு ஆக்ரோஷம் காட்டியதால் இருவரும் மைதானத்திலேயே மோதலில் ஈடுபட முயற்சித்தனர். 

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குமராவுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதமும், லிட்டான் தாசுக்கு 15 சதவீதமும் அபராதமாக விதித்துள்ளது.

மேலும் செய்திகள்