நாளை டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி : வெல்லப்போவது யார் ...?
நாளை நடைபெறும் டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
துபாய்,
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நாளை இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
நியூசிலாந்து அணிக்கு 20 ஓவர் உலகக்கோப்பையில் இது முதல் இறுதி போட்டி ஆகும்.
ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை இது இரண்டாவது 20 ஓவர் உலகக்கோப்பை இறுதி போட்டி ஆகும். ஏற்கனவே 2010 ம் ஆண்டு நடைபெற்ற இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது .
இரு அணிகளும் இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வென்றது இல்லை. இதனால் முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
2015-ல் ஒருநாள் போட்டி உலககோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது. இதனால் இறுதிப்போட்டியில் பதிலடி பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணி உள்ளது.