வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: கேப்டன் ரோகித் சர்மா விளையாடமாட்டார் என தகவல்...!

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா விளையாடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-12-19 10:32 GMT

Image Courtesy : AFP

சாட்டிங்காம்,

இந்திய அணி வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடேயேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 14 ந் தேதி தொடங்கியது.

இதில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதில் வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி மற்றும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை கே. எல். ராகுல் வழிநடத்தினார்.

வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநால் போட்டியில் ஆடிய போது கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா 3வது ஒருநாள் போட்டி மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 22ந் தேதி டாக்காவில் தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் களம் இறங்குவாரா? என்ற கேள்வி எழும்பியது. இதற்கு பதில் அளித்த இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் கே.எல்.ராகுல் அடுத்த ஓரிரு நாட்களில் தான் ரோகித் சர்மாவின் நிலையை நாம் அறிய முடியும், என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் ரோகித் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

அவருக்கு ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்திய அணிக்கு அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்கள் உள்ளதால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ரோகித்தை இந்த டெஸ்ட் போட்டியில் களம் இறக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை கே.எல். ராகுல் வழிநடத்துவார் என தெரிகிறது.

ரோகித் சர்மா விளையாடாத நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணியே இரண்டாவது போட்டியிலும் ஆடும், இந்திய அணியில் மாற்றம் இருக்காது என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்