ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டி20: 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி

ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.

Update: 2022-06-12 14:46 GMT

ஹராரே,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியை ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக நஜிபுல்லா 57 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள்ல் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

Tags:    

மேலும் செய்திகள்