இந்த போட்டியை பொறுத்தவரை நான் ஒரு பேட்ஸ்மேனாக இருந்திருக்கலாம் - வெற்றிக்கு பின் பேட் கம்மின்ஸ் பேட்டி

ஒரு அணியாக நாங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றதில் மகிழ்ச்சி.

Update: 2024-04-16 09:50 GMT

Image Courtesy: Twitter 

பெங்களூரு,

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 287 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் டிராவிஸ் ஹெட் 102 ரன், கிளாசென் 67 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 288 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பெங்களூரு அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 83 ரன்கள் அடித்தார். இதன் மூலம் 25 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டியை பொறுத்தவரை நான் ஒரு பேட்ஸ்மேனாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் இருந்தது. உண்மையிலேயே இந்த போட்டி பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.

இது போன்ற போட்டிகளில் சிறப்பான செயல்பாடுகள் வெளிவரும். உண்மையிலேயே இந்த மைதானத்தின் தன்மையை அறிய வேண்டுமெனில் ஒரு பவுலர் 7 முதல் 8 ஓவர் வரை வீசினால் மட்டுமே மைதானத்தின் தன்மையை கணித்து போட்டியில் தனது திறனை வெளிப்படுத்த முடியும்.

இந்த மைதானம் மிகவும் டிரையாக உள்ளது. ஒரு அணியாக நாங்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றதில் மகிழ்ச்சி. எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் தற்போது மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்