மழையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா போட்டி- டி.எல்.எஸ் விதிப்படி வெற்றி யாருக்கு சாதகம்?

தென் ஆப்பிரிக்கா 69 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து விளையாடி வந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.;

Update:2022-11-03 17:03 IST

சிட்னி,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று சிட்னியில் அரங்கேறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பாபர் 6 ரன்னிலும், ரிஸ்வான் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

அடுத்து வந்த முகமது ஹாரிஸ் 28 ரன்களுக்கு அவுட்டானார். அந்த அணி ரன்கள் குவிக்க தடுமாறி வந்த நிலையில் இப்திகார்- ஷதாப் கான் ஜோடி சரிவில் இருந்து மீட்டது. இப்திகார் அரைசதம் கடந்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் அதிரடி காட்டிய ஷதாப் கான் 20 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவர் 22 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோர்க்கியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.

அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் டி காக் டக் அவுட்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த ரோசோவ் 7 ரன்களில் ஷஹீன் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் மார்க்ரம் - பவுமா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். ஆனால் இந்த ஜோடியை ஷதாப் கான் பிரித்தார். பவுமா 36 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து மார்க்ரம் 20 ரன்களில் அவுட்டானார்.

தென் ஆப்பிரிக்கா அணி 9 ஓவர்களில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து விளையாடி வந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணியை விட தென் ஆப்பிரிக்கா 15 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதனால் இப்போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்ற நிலை இருந்தது. ஆனால் மழை தற்போது நின்றுள்ளதால் மீண்டும் போட்டி தொடங்கியுள்ளது.

போட்டி நேரம் பாதிக்கப்பட்டதால் தற்போது டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 14 ஓவர்களில் 142 ரன்கள் ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 30 பந்துகளில் 73 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் க்ளாஸென் மற்றும் ஸ்டப்ஸ் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்