வீராட் கோலி பார்ம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த சவுரவ் கங்குலி

வீராட் கோலி பார்ம் குறித்து முதல் முறையாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்து உள்ளார்.;

Update:2022-07-14 10:54 IST

லண்டன்

2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு முன்னாள் கேப்டன் விராட்கோலி சர்வதேச போட்டிகளில் சதம் எதுவும் அடிக்கவில்லை. அவர் சமீபகாலமாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் அவரை பல முன்னாள் வீரரகள் விமர்சித்து வருகிறார்கள். மேலும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவர் விளையாட்டில் இருந்து ஓய்வு எடுக்க பரிந்துரைத்துள்ளனர்.

பார்மின்றி தவிக்கும் விராட்கோலியை 20 ஓவர் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.

விராட் கோலியின் பார்ம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி மவுனம் காத்து வந்தார்.

இந்த நிலையில் வீராட் கோலி சிறப்பாக ஆடாதது குறித்து கருத்து தெரிவித்த கங்குலி அவரிடம் திறமையும் தரமும் இருக்கிறது. கோலி மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

மேலும் கங்குலி கூறியதாவது:-

சர்வதேச கிரிக்கெட்டில் அவர் செய்துள்ள சாதனைகளை பாருங்கள், அது திறமை மற்றும் தரம் இல்லாமல் நடக்காது. ஆம், அவர் தற்போது ஒரு கடினமான நேரத்தை அனுபவித்து வருகிறார். அது அவருக்குத் தெரியும்.ஆனால் அவர் ஒரு சிறந்த வீரராக இருந்துள்ளார்.

அவர் மீண்டும் திரும்பி வந்து நன்றாகச் செயல்படுவதை நான் காணலாம். ஆனால் அவர் தனக்கான வழியைக் கண்டுபிடித்து வெற்றிபெற வேண்டும்.

அவர் கடந்த 12-13 ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக களத்தில் இருக்கிறார், விராட் கோலியால் மட்டுமே அதைச் செய்ய முடியும்,

விளையாட்டில் இது அனைவருக்கும் நடந்துள்ளது. சச்சினுக்கும் நடந்தது, ராகுலுக்கும் நடந்தது, எனக்கும் நடந்தது, கோலிக்கும் நடந்தது. வருங்கால வீரர்களுக்கும் இது நடக்கும். இது விளையாட்டின் ஒரு பகுதி மற்றும் ஒரு விளையாட்டு வீரராக நீங்கள் கேட்க வேண்டும், அது என்ன என்பதை அறிந்து கொண்டு உங்கள் விளையாட்டை நீங்கள் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று கங்குலி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்