டி20 உலகக்கோப்பை; முதல் போட்டிக்கான நடுவர்கள் விவரங்களை வெளியிட்ட ஐ.சி.சி

டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டிக்கான நடுவர்கள் விவரங்களை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

Update: 2024-05-22 15:12 GMT

image courtesy: @ICC

துபாய்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ள 20 அணிகளில் பாகிஸ்தானை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது அணி விவரங்களை அறிவித்து விட்டன.

இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான நடுவர்கள் விவரங்களை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த போட்டிக்கான கள நடுவர்களாக வங்காளதேசத்தை சேர்ந்த ஷாகித் சைகத், இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் செயல்பட உள்ளனர்.

மேலும், டி.வி நடுவராக (3வது நடுவர்) ஆஸ்திரேலியாவை சேர்ந்த சாம் நோகாஜ்ஸ்கி, 4வது நடுவராக ஜிம்பாப்வேயை சேர்ந்த லாங்டன் ருசேரே மற்றும் மேட்ச் ரெப்ரீ-யாக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ரிச்சி ரிச்சர்ட்சன் ஆகியோர் செயல்பட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்